பக்கம்:இன்ப வாழ்வு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

133


தெரிந்தும் தெரியாமல் இச்சொல்லை இப்பொருளில் வைத்துப் பேசுகின்றனர். மக்கள் அகராதியைப் (பேச்சு வழக்கை) புரட்டுவோம். கொடு வாள் கத்தி, கொடுக்காய்ப் புளி மரம் என்னும் பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள ‘கொடு (கொடுமை) என்னும் சொல், வளைந்த வாள், வளைந்த காய் என வளைவுப் பொருளைத் தருவதுணர்க. இந்த இருபொருள் (சிலேடை) அழகுதோன்றக் கொடும் புருவம் என்றான் அவன். புருவம் வளைந்திருப்பதால், விற்புருவம்-புருவ வில் என்றெல்லாம் புலவர்கள் உவமமும் உருவகமும் செய்வது வழக்கம். அதனால் கொடும் (வளைந்த) புருவம் என்றது சரியே! மேலும், வருத்துகின்ற கண்ணுக்குத் துணையாய் நின்று கொடுமை செய்வதால் தொடும் (பொல்லாத கொடிய) புருவம் என்றதும் சரியே! ஒரே சொல்லில் இரு பொருள் அமைத்து விளையாடும் வள்ளுவரின் சொல்நயமும் பொருள் நயமும் என்னே என்னே! மேலும் சில அழகு காண்மாம்:

புருவத்தின் புறப்பாட்டைக் காணுங்கால், அது தன்னை மறைக்க வேண்டுமென்றால் மறைத்திருக்கலாம்; ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பது புலனாகும். இரண்டு கண்களுக்கும் நடுவிடம் இருக்கிறதே. அங்கிருந்து தான் புருவம் புறப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு புருவமும் ஒவ்வொரு கண்ணின் முதல் பகுதியிலிருந்து புறப்பட்டு, கண்ணைப் பாதியளவு சுற்றி வளைத்து, கடைக்கண் முனையில் வந்து முடிந்து விடுகிறது. வில்லின் இரு முனைகளைப் போலுள்ள புருவத்தின் இரு முனை களும், கண்ணின் இரு முனைகளைத் தொட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/134&oldid=550705" இலிருந்து மீள்விக்கப்பட்டது