பக்கம்:இன்ப வாழ்வு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

இன்ப வாழ்வு


‘பண்டு கமக்குப் பரிந்து மையூட்டிய பங்கயக்கை

ஒண்டொடிசோர உயங்குத னோக்கித் தயங்குமுது தண்டலை தன்னில் தலைப்பட்ட நாளில் தலைவனைகாம் கண்டது கொண்டல்லவோ என்று போலுங்

கலுழ்கின்றதே” என்னும் அம்பிகாபதி கோவை (338) செய்யுளால் அறிய லாம். உறுப்புக்களின் ஒற்றுமைக்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது.

வடமொழியில் காளிதாசனது கைப்புனைவு ஒன்று இங்கே நினைவிற்கு வருகின்றது. இங்கே அதையுங் கூற ஒப்புதலும் மன்னிப்பும் வேண்டும். ஒரு பெண் ஒரு நீர்த்துறையில் தன் மார்புக் கச்சைக் கல்லில் அடித்துத் துவைத்துக்கொண்டிருந்தாள். அதனைக் கண்டு கற்பனை செய்கிறான் காளிதாசன். அந்தக் கச்சானது மார்பிலுள்ள கொங்கைகளைக் கட்டியடக்கிச் சிறைப்படுத்தி இவ்வளவு நேரம் வருத்திற்றாம். அக்கொடுமையைக் கண்டு பொறுக்கமுடியாத கைகள், அந்தக் கச்சினைக் கல்லில் அடித்துப் பழிக்குப் பழி வாங்கினவாம். அடி வாங்குபவன் சோர்ந்து விழுந்து விடாமல் இருப்பதற்காகத் தண்ணீர் கொடுத்துக் கொடுத்து அடிப்பதைப் போல, அந்தக் கச்சைத் தண்ணீரில் நனைத்து நனைத்துக் கைகள் அடித்தனவாம். இஃது ஒர் இலக்கிய இன்பம். அவ்வளவு தான்! இஃதும் உறுப்புக்களின் ஒற்றுமைக்காக இங்கே எடுத்துக்காட்டப்பட்து

அம்பிகாபதி கோவையின்படி கண் கைகளின் சோர்வுக்காக அழுதிருப்பதும், காளிதாசனது கவியின்படி கொங்கைகளுக்காகக் கைகள் கச்சினைக் கல்லில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/137&oldid=550708" இலிருந்து மீள்விக்கப்பட்டது