பக்கம்:இன்ப வாழ்வு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

137


அடித்திருப்பதும், தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பது போலவும், இப்பிறவியில் விட்டு மறுபிறப்பில் வருத்துவது போலவும், முதலில் வருந்தவிட்டுப் பின்னர்ச் செயலாற்றும் மடிமையாகும். ஆனால், புருவம் முதலிலிருந்தே கண்ணோடு ஒத்துழைப்பதாகக் கற்பனை செய்துள்ள வள்ளுவர்க்குக் கைம்மாறு யாதோ?

இந்தக் குறளில் மொழியழகு ஒன்று பொதிந்து கிடக்கிறது. மறைப்பின் நடுங்கு அஞர் செய்யலமன்’ என்பது குறள் பகுதி. ‘புருவங்கள் கண்களை மறைத் திருந்தால் அவை துன்பம் செய்திருக்கமாட்டா என்ற கருத்தை ‘மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல” என்ற பகுதியும், மறைக்காததனாலேயே இவ்வாறு என்னைத் துன்புறுத்துகின்றன என்ற கருத்தை மன்’ என்னும் ஒரே சொல்லும் அறிவிப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. ‘மறைக்காததால் துன்புறுத்துகின்றன என்ற கருத்து, குறளில் வெளிப்படையாய்ச் சொல்லா தொழிந்த கருத்து. இந்த ஒழிந்த (விட்ட) கருத்தை மன்’ என்பது இசைத்துக் கொடுப்பதால், இதற்கு ‘ஒழியிசைப் பொருள்” என்று இலக்கணத்தில் பெயராம். இரண்டெழுத்தில் இத்துணைப் பெரிய பொருள் பொதிந்து கிடக்கிற மொழியழகுதான் என்னே!இது விளங்காமல் இக்குறளைக் கற்று என்னபயன்?

ஊசி முனையில் நிற்பதே கடினம்; கூத்தாடுவதோ அதனினும் அருமை இந்த அருஞ்செயலைத் தானே இந்தக் குறளில் வள்ளுவர் செய்திருக்கின்றார்! இப்படி ஒரு கருத்தைக் கற்பனை பண்ணுவதென்பது கிள்ளுகீரையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/138&oldid=550709" இலிருந்து மீள்விக்கப்பட்டது