பக்கம்:இன்ப வாழ்வு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இன்ப வாழ்வு


ஆட்டிப் படைக்கும் ஆடவரேறு’ (ஆண் பிள்ளைச் சிங்கம்) ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டைவிட்டு விட்டான் என்பது புலனா கிறது.

இக்குறளில் உள்ள ஒஒ’ என்பது உயிர்அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும், இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று? ‘ஒஒ’ என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவது தானே இதன் பொருள்! இந்த ஒ’ என்னும் இடைச் சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் கழிவிரக்கம். முன்பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்துபோனதாக ‘ஓஒ என வருந்துகிறான் அல்லவா? இந்த ‘ஒ’ என்னும் இடைச் சொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள ‘உம்’ இடைச் சொல்லும் கப்பலில் சுக்கான் திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள ‘உம்’ என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், ‘ஓஒ என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்.

அடுத்து, உடைந்ததே என்னும் சொல்லைக் காண்பாம். உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே. ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஒட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஓரளவு பயன்படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியா தன்றோ? இப்பொழுது காண்க, “பீடு உடைந்ததே’ என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை மேலும், ‘உடைந்தது'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/143&oldid=550715" இலிருந்து மீள்விக்கப்பட்டது