பக்கம்:இன்ப வாழ்வு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

143


என்பதோடு நில்லாமல், இறுதியில் “ஏ சேர்த்து ‘உடைந்ததே என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப்பாட்டையும், உடைந்தது உடைந்ததுதானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஒர்க!

ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்பு சிறந்ததொரு காரணம் என்னும் உடற் கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ? மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி) மாயை’ என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காம மயக்கத்தை மிகுதியாக்கி விட்டது என்னும் கருத்துடைய

‘இனத் தியல்பாம் அறிவென்ப துண்மையே மனத்துயர் செயும் மயல்மாற்று நீறுதான் அனிச்ச மெல்லடியினார் நுதல் அடுத்தலும் பனித்துடல் வெதும்பு மால்படுத்தலால் என்பரர்.” என்னும் பிரபுலிங்க லீலைப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.

பழியில் சுப்பிரமணிய பாரதியார் பகர்ந்தது போல் மொழிகளிலே இனியதுநம் முத்தமிழே யம்மானை மொழிகளிலே இனியது.கம் முத்தமிழே என்பதற்கு

வழியுடன் ஓர் அகச்சான்று வகுத்துரைப்பாய்

அமமானை தமிழ் என்றா லேயினிமை தானறிவாய் அம்மானை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/144&oldid=550716" இலிருந்து மீள்விக்கப்பட்டது