பக்கம்:இன்ப வாழ்வு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

145


அணிகலன்களைக் கொண்டு வந்து அணிந்திருப்பது எதற்கோ? (ஏதில - அயலானவை-ஏது இல = ஏதும்எந்தத்தொடர்பும் இல்லாதவை; தந்து ச கொண்டுவந்து தந்து; பிணை = பெண்மான்; ஏர்தல் - போலுதல்-ஏர் = போன்ற; மடம் - மருட்சி-மருண்ட தன்மை. மான் போன்ற மடநோக்கு என்றால், மருண்டு மருண்டு பார்க்கும் நோக்குதானே!)

(விரிவுரை) இந்தக் குறளில், தலைமகன் வாயிலாக வள்ளுவர் உலக மக்களைச் சாடுவதான குறிப்பின் வாடை வீசுகின்றது. மான்போன்ற மருண்ட பார்வையையும் நாணத்தையும்விட ஒரு பெண்ணுக்கு அழகு தரும் அணி கலன் (ஆபரணம்) வேறு என்ன இருக்க முடியும்? அந்த இயற்கை அணிகலன் இரண்டும் உடையவளுக்கு வேறு நகைகளும் வேண்டுமா? அல்வா’ துண்டுக்குச் சர்க்கரை தொட்டுக்கொள்வதுண்டோ? மடநோக்கும் நாணமும் இல்லாதவளுக்கு எவ்வளவு நகை போட்டாலும் எடுக்குமா? கசக்கும் காஞ்சிரங்காயானது, எவ்வளவு இனிப்புச் சேர்த்தாலும் இனிக்குமா! உலகியலில் பலரோடு பொருத்திப் பார்க்கும்போது, இந்தக் கருத்துக்கள் எல்லாம் உண்மை என்பது புலனாகும்.

இங்கே கூறப்பட்டுள்ள இயற்கையணிகள் இரண்டினையும் இன்னும் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மடநோக்கு என்பது, புற உறுப்பாகிய கண்ணுக்கு அணிகலம்; நாணம் என்பது அக உறுப்பாகிய உள்ளத்துக்கு அணிகலம். இவையிரண்டும் தொடர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/146&oldid=550718" இலிருந்து மீள்விக்கப்பட்டது