பக்கம்:இன்ப வாழ்வு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள்ளும் காமமும்

உலகியலில் கள், காமம் இரண்டையுமே சிலர் கண்டித்துள்ளனர் - கண்டித்து வருகின்றனர். காரணம்: இரண்டுமே கருத்தை அழிக்குமாம் - தீமையைப் பெருக்குமாம். ஆனால், தன் இன்பக் காதலியைக் கண்டு களித்த காதலன் ஒருவன் அவ்விரண்டையும் பற்றிச் செய்துள்ள திறனாய்வு ஒன்றினைத் திருவள்ளுவர் ஒரு குறளில் வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளார். இலக்கியச் சுவையுணரும் திறன் வளர்ச்சிக்காக ஈண்டு அக்குறளை ஆராய்வாம்:

‘உண்டார்க ணல்ல தடுருறாக் காமம்போற்

கண்டார் மகிழ்செய்த லின்று

(உண்டார்கண் அல்லது அடுநறா காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.)

(பதவுரை) அடுநறா = அடப்பட்ட அதாவது செய்து உண்டாக்கப்பட்ட கள்ளானது, உண்டார் கண் அல்லது - அருந்தியவர்களிடத்தில்தான் மகிழ்ச்சியை உண்டாக்குமே தவிர, காமம்போல் - காமத்தைப் போல, கண்டார் மகிழ் செய்தல் இன்று = பார்த்தல் மட்டும் செய்தவரிடத்தும் மட்டும் செய்தவரிடத்தும் மகிழ்ச்சியை உண்டாக்குவ தில்லை. (அடுதல் = உண்டாக்குதல் - தயாரித்தல்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/150&oldid=550723" இலிருந்து மீள்விக்கப்பட்டது