பக்கம்:இன்ப வாழ்வு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இன்ப வாழ்வு


நறா - கள். கள் உண்டாக்கப்படுவதால் ‘அடு நறா’ எனப்பட்டது.)

(விளக்கவுரை) ‘உங்கள் பிள்ளைகளுக்குள் எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை’ என்று ஒரு வீட்டுக்கு வந்தவர் கேட்டாராம். அதற்கு, “அதோ கூரை மேல் ஏறிக்கொள்ளி வைக்கிறானே, அவன்தான் இருப்பவர்களுக்குள் நல்ல பிள்ளை’ என்று வீட்டுக்காரர் பதில் சொன்னாராம், இதே கதைதான் இந்தக் குறளில் கள்ளைக் காட்டிலும் காமம் சிறந்தது என்று சொல்லி இருப்பதும் ஒரு தலை மகளைக் கண்டு அவளது அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்து மகிழ்ச்சி கொள்கிற ஒரு தலைமகன் கூற்றாக வைத்து வள்ளுவர் வேடிக்கை செய்துள்ளார். அவ்வளவுதான்!

அவன் அவளது அழகுத் தோற்றத்தைக் காணுகிறான். அந்தக் காட்சியின்பத்தில் இரண்டறக் கலந்து திளைக் கிறான். இன்னும் அவளை நெருங்கவும் இல்லை; அவளோடு பேசவும் இல்லை; அவளைத் தொடவும் இல்லை. கண்டதே காட்சி என்றபடி, கண்ட அளவி லேயே காமச்சுவை நுகர்கிறான். கள் எனில் இது கை வரப்பெறுமா? காசு கொடுக்கவேண்டும்; கலயத்தைக் கையில் எடுக்கவேண்டும்; கடகட வென்று உள்ளே நெட்டவேண்டும். அதன் பின்னர்தான் ஆட்ட பாட்ட மெல்லாம்! ஆனால் காமத்துக்கு அவ்வளவு வேண்டிய தில்லை யன்றோ? அதனால்தான், ‘காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று” என்றான் தலைமகன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/151&oldid=550724" இலிருந்து மீள்விக்கப்பட்டது