பக்கம்:இன்ப வாழ்வு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இன்ப வாழ்வு


மேற்கூறிய ஐந்தனுள், கண்ணால் காணுவதன் முலம் பொருள்களோடு தொடர்பு கொள்ளுதல் மிக எளிது - எதையும் எளிய முயற்சியில் கண்டுணர்ந்து கொள்ள முடியும். காணுதற்கு அவ்வளவு பெரிய கவனம் வேண்டுவ தில்லை. இதனினும் காதால் கேட்டு உணர்வதற்கு மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும். இதனினும் முக்கால் மோந்து உணர்வதற்கு இன்னும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும்-பொருளினிடம் முன்னைய இரண்டினும் மிகவும் நெருங்கவேண்டும். இதனினும் மெய்யால் - தோலறிவால் தொட்டு உணர்வதற்கு மேலும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - முன்னைய முன்றினும் பொருளை மிகமிக அணுகி உடல் தொடர்பு கொள்ள வேண்டும். இதனினும் வாயால் உண்டு தொடர்பு கொள்வதற்கு முயற்சியும் நெருக்கமும் மேலும் மிகமிக வேண்டும். உணவு, உடலோடு இரண்டறக் கலந்து விடுகிறது.

ஒருவரது வீட்டிலுள்ள ஒப்பனைகளைக் (அலங்காரங் களைக்) காசின்றிக் காணக் கூசுவதில்லை. அவர் வீட்டில் எழும் இன்னிசையைக் காசின்றிக் கேட்க வெட்கு வதில்லை. அவர் வீட்டு நறுமணப் புகையைப் பணமின்றி நுகர நாணுவதில்லை. அவர் வீட்டுக் காட்சிப் பொருள் களைக் காசின்றித் தொட உட்குவதில்லை. ஆனால் அவர் வீட்டு உணவை மட்டும் காசின்றி (இலவசமாக) உண்ண வெட்கப்படுகின்றோம். பலமுறை வருந்தி அழைத்தால்தான் ஒரு முறை தயக்கத்துடன் அருந்து கிறோம். எனவே, உணவுப் பொருளை நுகர்வதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/153&oldid=550726" இலிருந்து மீள்விக்கப்பட்டது