பக்கம்:இன்ப வாழ்வு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு நோக்கு விந்தை!

உலகில் உயிர்கட்கு ஒரு குறிப்பிட்ட நோயை உண்டாக்கும் ஒரே பொருளே அதே நோயைப் போக்கும் மருந்தாகவும் இருக்கும் விந்தையைப் பெரும்பாலும் பார்க்க முடியாது. அப்படியே எந்தப் பொருளாவது ஒரு நேரம் நோய் உண்டாக்கினால் இன்னொரு நேரத்தில் வேண்டு மானால் அந்நோய்க்கு மருந்தாக இருக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட ஒரு பொருள், நோயுண்டாக்கிய நேரத்திலேயே மருந்தாகவும் மாறுகிறதாம். இதில் வியத்தகு விந்தை என்ன வெனில், அப்பொருள், ஒரு நொடி (விநாடி) நேரம் நோய் தந்தும் மறுநொடியில் மருந்தாகியும், மீண்டும் அடுத்த நொடி நோய் தந்தும் அதற்கடுத்த நொடி மருந்தாகியும் இப்படி மாறிமாறி மாய் மாலம்’ (மாயா சாலம்) புரிகிறதாம். அப்பொருள், முதல் கண்ணுறுகையில் (சந்திப்பில்) ஒரு தலைமகனது உள்ளத்தை ஊஞ்சலாட்டும் ஒரு தலை மகளது கண் நோக்குத்தான்! ஒர் ஐரோப்பியரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட மாநயம் மிகுந்த இந்தக் கற்பனைக் கருத்து, திருவள்ளுவனாரின் ஒரு திருக்குறளில் அமைந்து மிளிர்கிறது! காதலியின் கண்நோக்கைக் கண்டு காதலன் கூறுவதாக உள்ள அக்குறள் வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/156&oldid=550729" இலிருந்து மீள்விக்கப்பட்டது