பக்கம்:இன்ப வாழ்வு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இன்ப வாழ்வு


‘இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு

நோய்கோக்கொன் றந்நோய் மருந்து.’

(இரு நோக்கு இவள் உண் கண் உள்ளது: ஒரு நோக்கு நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து)

(தெளிவுரை) இவள் கண்களின் பார்வை இருவகை யாய்த் தென்படுகிறது. அவற்றுள் ஒரு பிரிவு, நோய் தரும் நோக்கு; மற்றொன்று அந்நோய்க்கு மருந்து.

(பதவுரை) இவள் உண் கண் - இவளுடைய மையுண்ட கண்களிலே, இரு நோக்கு உள்ளது = இரட்டை நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு நோக்கு நோய் நோக்கு - அவற்றுள் ஒரு பார்வை (காம) நோயை உண்டாக்கும் பார்வையாகும்; ஒன்று அந்நோய் மருந்து = மற்றொரு பார்வையோ அந்த (காம) நோயைத் தீர்க்கும் மருந்தாகும். என்னே வியப்பு (உண்ணுதல் = மையூசுதல் - உண் கண் - மையுண்ட கண் - மை பூசிய கண்)

(விரிவுரை) இக்குறளைப் பற்றிய செய்தியொன்று மிகவும் சுவையானது. திருக்குறள் முழுதிற்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டல்லவா? டாக்டர் கிரெளல் (Dr. Graul) என்னும் ஐரோப்பியர் (செர்மனிக்காரர்) அம்மொழிபெயர்ப்பு நூலை ஒரு புரட்டுப் புரட்டியபோது, தற்செயலாய் இக் குறள் அகப்பட்டதாம். அப்படியே மெய்ம்மறந்து விட்டாராம். ‘ஆ’ இப்படியும் ஒரு கருத்துள்ள பாடல் இருக்கிறதா? ஒருத்தியின் நோக்கிலேயே இரு நோக்கு அவற்றுள் ஒன்று நோய் தருகிறது; மற்றொன்று அதற்கு மருந்தாகிறது. என்ன அழகான கருத்து எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/157&oldid=550730" இலிருந்து மீள்விக்கப்பட்டது