பக்கம்:இன்ப வாழ்வு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

157


அருமையான கற்பனை! இந்நூல் முழுதும் படிக்கவேண்டும்; மொழிபெயர்த்துக் கொள்ளவும் வேண்டும்” - என்று பலவாறு பாராட்டி, அவ்வாறே படித்து, செர்மனியிலும் இலத்தீனிலும் மொழி பெயர்ப்பும் செய்தாராம். என்ன வியப்பு

இங்கே இரு நோக்கம் என்றால், இரண்டு நோக்கங்கள் இல்லை. ஒரே நோக்கந்தான். இரண்டு கண்கள் இருந்தாலும் இரண்டும் இணைந்துதான் நோக்க முடியும். அதுவும் ஒரு நோக்கந்தான் செய்ய முடியும். இங்கே இரு என்றது, ஒருவனது இரட்டை நடிப்பு (Double Act) போல, ஒரு நோக்கினது இரட்டை நிலைமையைக் குறிக் கிறது. அதனால்தான் ஆசிரியர் ‘இரு நோக்கு என்று ஆரம்பித்திருந்தும் உள்ளது என ஒருமையில் முடித்துப் போந்தார். இந்த இரட்டை நடிப்பில், ஒன்று நோய் செய்கிறது, மற்றொன்று மருந்தாகிறது. அப்படி என்றால் என்ன?

மாலை நான்கு அல்லது ஐந்து மணியானால் சிலருக்குத் தலைவலி ஏற்பட்டுவிடும். தேநீர் அருந்தினால்தான் அது போகும். அத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் என்ன? அதுவும் அந்தத் தேநீர் தான். கிடைக்காதபோது நோய் - கிடைத்தபோது மருந்து. மதுவும் அப்படியே - மங்கையும் அப்படியே! இந்தக் கருத்தை, குண நாற்பது என்னும் நூலில், தலைமகன் தலைமகளை நோக்கிக் கூறுவதாக உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/158&oldid=550731" இலிருந்து மீள்விக்கப்பட்டது