பக்கம்:இன்ப வாழ்வு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிஞர்கள் பார்வையில் ஆசிரியர்

பரந்த அறிவு, பணிக்கு உறைவிடம், தளும்பாத நிறை குடம், பண்பின் உறைவிடம், எப்போதும் யாரிடத்தும் இன்முகம், கடுஞ்சொல் இல்லாமை, இனியவே கூறும் சொல்லாண்மை இத்தகைய பல பண்புகள் உருக்கொண்டு திகழ்ந்த பேரறிஞர். பிறரால் நிரப்ப முடியாத இலக்கிய வெற்றிடத்தை ஏற்படுத்திச் சென்ற பெரும் பேராசான்.

- இரா. முத்துக்குமாரசாமி. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. பலதுறைப் பணியால், தொண்டால் இயற்கவி, செந்தமிழ்ச் செம்மல், தமிழ் ஆய்வுக்கடல். தமிழ்ப் பேரவைச் செம்மல் (மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்) போன்ற பதினொரு விருதுகள் வந்து குவிந்தன. இவை யெல்லாம் சும்மாவா வந்தன? பல்லோர் வியக்கும் வண்ணம் ஈடுபாட்டுடன் பணியாற்றியதன் விளைவாகவே வந்த தொண்டுச் சின்னங்கள் இவை. இதனால் இப்பெருமகனார் சுந்தர சண்முகனார் பெரியாழ்வார் குறிப்பிடும் தொழு குலமாம் தொண்டக் குலத்தைச் சார்ந்தவராகி அழியாப் புகழுடன் திகழ்கின்றார்.

- பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார், சென்னை. இலக்கணத்தில் புலவர். இயற்றமிழில் புலவர். ஆங்கிலம், பிரஞ்சு வல்லவர், தமிழின் பல துறைகளிலும் கருத்துக்கள் ஊறிய ஊற்றாகச் சந்தர சண்முகனார் திகழ்ந்தார். அகராதிக் கலையோடு அவரைப் பிரித்துப் பார்க்க இயலாத உறவு கொண்டிருந்தார். எளிய வாழ்வு. வலிய தோற்றம். பெரிய உள்ளம். அரிய புலமை.

- பேராசிரியர் தி. முருகரத்தனம், மதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/16&oldid=550733" இலிருந்து மீள்விக்கப்பட்டது