பக்கம்:இன்ப வாழ்வு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம்

வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் என்பது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளிலுள்ள இன்பத்துப் பால் எனப்படும் காமத்துப்பால்தான். வள்ளுவர் அப்பகுதியில், இன்ப இல்லற வாழ்விற்கு மிக இன்றியமையாததான அன்பின் சிறப்பை-காதலின் பெருமையை மிகவும் அழகாகவும் இனிமையாகவும் எடுத்துரைத்து உயர்ந்த கற்பு நெறிக்கு வழிவகுத்துளார்.

அப்படியிருந்தும், திருக்குறள் காமத்துப்பால் சிலரை மிரட்டியிருக்கின்றது. திருவள்ளுவரா இதனைப் பாடினார்! இவ்வாறு பாடினார்! அவர் பாடலாமா? என்றெல்லாம் எண்ணச் செய்துள்ளது.-பேசச்செய்துள்ளது. அறத்துப் பால் பொருட்பால் மட்டும் கற்றவர் உண்டு. அம்மட்டும் பாடஞ்சொன்னவர் உண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்த வீரமாமுனிவர் (பெஸ்கி) என்னும் இத்தாலி நாட்டுத்துறவியார்கூட காமத்துப்பாலை விட்டு விட்டார்.

ஏனைய பால்களினும் முதலில் காமத்துப்பால்தான் பரவவேண்டும்; உலகெங்கணும் பரவவேண்டும். பரவினால், விலங்குகளினும் கேடாக மக்களிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/160&oldid=550734" இலிருந்து மீள்விக்கப்பட்டது