பக்கம்:இன்ப வாழ்வு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

165


தலைவனைத் தங்க வைப்பதற்கு அக உறுப்பாகிய நெஞ்சைத் தேர்ந்தெடுத்தாள். வெளி உறுப்பாகிய கண்ணிலே வைத்தால் தவறி விழுந்து விட்டாலும் விழுந்து விடலாம். உள்ளுறுப்பாகிய நெஞ்சிற்குள் வைத்தால் தவறி விழ முடியாதல்லவா? மேலும், காணும் கண்ணை விட நினைக்கும் நெஞ்சு இன்றியமையாததல்லவா? நினைக்கும் நெஞ்சின்றி மனிதன் என்ன எண்ண முடியும்எழுத முடியும்-பேச முடியும்-வாழ முடியும்? கண்ணில்லாத குருடர்களும் தட்டுத் தடுமாறி வாழ்கின்றனர் - ஆனால் அவர்கட்கும் நெஞ்சு உண்டு.

நெஞ்சம் என்பது கழுத்தின் உட்பகுதி என்று பொருள் படுவது போலவே, மனம் என்றும் பொருள்படும். (விஞ்ஞான முறைப்படி, மனம் என ஒன்று தனியாக இல்லை. முளையின் செயலைத் தான் மனம் என்கின்றனர் மக்கள்) நெஞ்சு விழுங்குவதற்குப் பயன்படுவது போலவே, நினைப் பதற்கும் பயன்படுவதாக மக்களும் புலவர்களும் சொல்லுவது மரபு. இந்த இரு வகை நிலையினையும், ‘நெஞ்சில் அடைத்துக் கொண்டது’, ‘அந்தப் பெயர் நெஞ்சில் இருக்கிறது, வாயில் வர மாட்டேன் என்கிறது’ என்னும் உலக வழக்குக்களால் உணரலாம். நெஞ்சே நீ நினையாய்’ என அப்பரடிகளும் பாடியிருக்கிறாரல்லவா? மேலும், மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் ஐம் பொறிகட்கும் பின் நின்று அவற்றை இயக்குவதும் இந்த நெஞ்சம் எனப்படும் மனம் தான். நெஞ்சம் சரியில்லை என்றால் பைத்தியந்தான்! பின்னர் வாழ்வேது?

ஆகவே, கண்ணினும் நெஞ்சம் சிறந்தது என்பது தெளிவு. எனவே கண்ணைத் தேர்ந்தெடுத்த தலைவனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/166&oldid=550740" இலிருந்து மீள்விக்கப்பட்டது