பக்கம்:இன்ப வாழ்வு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இன்ப வாழ்வு


விட நெஞ்சைத் தேர்ந்தெடுத்த தலைவி ஒருபடி மேல் தானே? அன்றியும், தலைவன் தலைவியை இன்னும் கண்ணிற்குள் வைக்கவில்லை. இப்பொழுதுதான் இடம் தேடிக் கேட்டுக் கொண்டிருக்கிறான். ஆனால் தலைவியோ எப்பொழுதோ தலைவனுக்கு இடம் தேடிப் பிடித்துவிட்டாள்அதாவது தலைவனைத் தன் நெஞ்சிற்குள் முன்பே பதித்து உறுதியாகத் தங்க வைத்து விட்டாள். அதனால் அவள் அவனை விட மேலும் ஒரு படி மேலாம்!

தலைவன் தன் நெஞ்சில் இருப்பதைத் தலைவி தன் தோழியிடம் மிகவும் அருமையாக அணிந்துரைத்தாள்: ‘தோழியே! என் காதலர் என் நெஞ்சில் எப்போதுமே எழுந்தருளியிருப்பதால், சூடான உணவுப் பொருள்களை உணணுவதற்கு யான் மிகவும் அஞ்சுகிறேன். ஏனெனில் சூடானதை உண்டால் அது நெஞ்சின் வழியாகச் செல்லும் போது, அந்நெஞ்சத்தில் இருக்கும் காதலரைச் சுட்டு விடுமே-அவர் வெந்து விடுவாரே!” என்று கூறுகிறாள். தலைவிக்குத் தலைவன் மேல் எத்துணை தலையன்பு! இந்தக் கற்பனையை,

‘நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.’

(வெய்து = வெப்பமானது; வேபாக்கு = வேதல்.) என்னும் குறளால் அறிந்து மகிழலாம். காதலரைச் சுட்டு விடும் என்பதற்காகச் சூடான உணவினை உண்ணாத தலைவி, ஐசுகிரீம் தந்தாலும் அது அவர் மேல் பட்டால் அவர் குளிரால் நடுங்குவார் என்று அஞ்சி அதையும் உண்ண மறுத்தாலும் மறுப்பாள் போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/167&oldid=550741" இலிருந்து மீள்விக்கப்பட்டது