பக்கம்:இன்ப வாழ்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

சுந்தர சண்முகனார் தமிழ் இலக்கியத்தில் ஆழமான அறிவுடையவர். அயராது உழைத்தவர். தொகுப்பியலிலும் தனிமுத்திரை பதித்தவர்.

- முனைவர் வி. ஐ. சுப்பிரமணியன், தஞ்சைப் பல்கலைக் கழக முதல் துணைவேந்தர். உடல் நலம் குறைந்திருந்தாலும் அவர் தமிழ் மீது கொண்ட பற்றினால் பிறர் தொட முடியாத, தொட எண்ணாத தம் ஆற்றலுக்கு மீறிய பல துறைகளில் ஈடுபட்டுச் சிறந்த நூல்களை எழுதிச் சாதனை படைத் துள்ளார். - பேராசிரியர் க. சச்சிதானந்தம், புதுச்சேரி எங்குக் குறை காணினும் பொறாத உள்ளமுடையவர் முனைவர் சுந்தர சண்முகனார். தவறு செய்தவர் எவரேயாயினும் அஞ்சாது எடுத்துக் காட்டும் நெஞ்சுரம் மிக்கவர்.

- புலவர் மு. இறைவிழியன், ஆசிரியர், நற்றமிழ், புதுச்சேரி. I came to know about Prof. Sundara Shanmuganar initially as a patient and then as the literary giant. In spite of various health problems that would have discouraged most people, Sundara Shanmuganar overcame them with determination and continued to enrich Tamil Nadu and Tamil literature by his timeless efforts.

- பிரிகேடியர் பி. இராமமூர்த்தி நரம்பியல் மருத்துவ மேதை, சென்னை. காலத்தால் அழிக்கப்பட முடியாத கருத்தாழம் மிக்க ஒப்பற்ற ஆய்வுத் தமிழிலக்கியங்களை உயிருள்ளதாகப் படைத்து, ஒண்டமிழ்த் தமிழுலகிற்களித்து ஒளிரும் வரலாறாக நிலைத்து வாழும் சிந்தனைச் செம்மலை, செந்நாப் புலவரை, இலக்கிய அரங்குகளைக் கலக்கிய ஏந்தலை என் தமிழ் நெஞ்சம் மறப்பதில்லை.

- பாவலர் கோ. இளங்கோ பாண்டியன், புதுச்சேரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/17&oldid=550744" இலிருந்து மீள்விக்கப்பட்டது