பக்கம்:இன்ப வாழ்வு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

175


யாத்துள்ளேன். வெண்பா, ஆசிரியம், மருட்பா, ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலித்துறை, கண்ணிகள் முதலிய பலவகைப் பாக்களால் ஆன இந்நூலில், உரை நடையும் ஒரு காதையின் இடையே இடம் பெற்றுள்ளது

12. தொல் திராவிட மொழி கண்டு பிடிப்பு: தமிழின் சிறப்பையும் தொன்மையையும் ஏற்க விரும்பாத சிலர் தென்மொழிகள் தமிழிலிருந்து பிறக்கவில்லை. மாறாகத் தொல் திராவிட மொழி என்று ஒரு மொழி இருந்த தாகவும் அதில் இருந்து கிளைத்தவையே தமிழ் உட்பட்ட தென் மொழிகள் என்ற அடிப்படையற்ற ஒரு கற்பனையைக் கூறி வருகின்றனர். இதனை மறுக்கக் கருதிய சுந்தர சண்முகனார் இந்நூல் மூலம் தொல் திராவிட மொழி தமிழே என்றும் அதிலிருந்து கிளைத்தவையே பிற திராவிட மொழிகள் என்றும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

13. மலர் மணம்: இப் புதின நூலின் கொளுவாக ஆசிரியர் எழுதியுள்ளது; பெரியவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, பிள்ளைகளின் வாழ்வை லலிந்து அமைக்க முயலக்கூடாது; பிள்ளைகளின் இயல்பையும் உணர்ந்து - விருப்பத்தையும் மதித்து, இயன்றவரையும் அவர்கட்கு ஏற்றாற்போல் ஒத்து ஒழுகியே அவர்தம் வாழ்வைச் செம்மை செய்ய வேண்டும் - என்பது உளநூல் உண்மை. பெற்றோரைப் பேணுதலை விட, பிள்ளைகட்குப் பெரிய கடமை வேறு இருக்க முடியாது; பெற்றோருக்காக, காதல் என்று என்ன - உடல் பொருள் உயிர் அனைத்தையுமே விட்டுக் கொடுக்கலாம் - என்பது அறநூல் அமைதி. எனவே, பெற்றோர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா?-பிள்ளைகள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? கதைக்குள் செல்லலாமே!

14. சிலம்போ சிலம்பு: இந்நூலின் பதிப்புரையி லிருந்து நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தின் வையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/176&oldid=550751" இலிருந்து மீள்விக்கப்பட்டது