பக்கம்:இன்ப வாழ்வு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாயிர வியல்


இன்ப இலக்கியம்


தமிழ் மொழி தோன்றிய நாள்தொட்டு இற்றை நாள் வரை இன்ப இலக்கியத்திற்குக் குறைவேயில்லை. அகப் பொருள் என்றும் சிலரால் சிற்றின்பம் என்றும் குறிக்கப் படுகின்ற காதல் இன்ப வாழ்வு, பெரும்பாலான தமிழிலக் கியங்களில் பெரிதுபடுத்திப் பேசப் பெற்றுள்ளது. இன்னும் கேட்டால், இந்த இன்பக் காதல் வாழ்விற்கென்று இலக் கணமும் வரையறுக்கப் பட்டுள்ளது-இதற்காகத் தமிழில் இலக்கண நூற்களும் உண்டு.

பழந்தமிழ்ச் சான்றோர்கள், மக்கள் வாழ்வினை அகப் பொருள் வாழ்வு என்றும் புறப்பொருள் வாழ்வு என்றும் இரண்டாகப் பகுத்தனர். அகப்பொருள் என்பது, ஒருவனும் ஒருத்தியும் உள்ளம் ஒன்றிக் காதலித்து மணந்து வாழும் குடும்ப வாழ்க்கையைக் குறிப்பதாகும். புறப்பொருள் என்பது குடும்ப வாழ்வல்லாத வெளியுலக வாழ்வைக் குறிப்பதாகும். மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் தொல்காப்பியரால் இயற்றப் பட்ட தொல்காப்பியம் என்னும் பெரிய இலக்கண நூலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/18&oldid=514550" இலிருந்து மீள்விக்கப்பட்டது