பக்கம்:இன்ப வாழ்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

இன்ப வாழ்வு


அகப்பொருளுக்கும் புறப்பொருளுக்கும் இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதற்கென்றே பொருளதிகாரம் என்னும் ஒரு பெரிய பாகத்தைத் தொல்காப்பியம் செலவழித் துள்ளது. இத்துறைக்குப் 'பொருள் இலக்கணம்’ என்று பெயராம். நாம் ஈண்டு இன்பவாழ்வுத் துறையாகிய அகப் பொருள் இலக்கணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கடைச்சங்க காலத்தில் 'இறையனார் களவியல்’ என்னும் அகப்பொருள் இலக்கண நூல் எழுந்தது. இஃது இறைவனால் (கடவுளால்) பாடப்பட்டதாகக் கதை பேசப்படுகிறது. இடைக்காலத்தில் நாற்கவிராசநம்பி என்பவர் 'அகப்பொருள்' விளக்கம் என்னும் ஓர் அழகிய அகப்பொருள் இலக்கண நூல் எழுதியுள்ளார். இதனை ‘நம்பி யகப்பொருள்' எனவும் அழைப்பர். பிற்காலத்தில் வைத்தியநாத தேசிகர் இயற்றிய 'இலக்கண விளக்கம்’ போன்ற இலக்கண நூற்களிலும் அகப்பொருள் இலக்கணம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த அகப்பொருள் இலக்கணம் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாது, தமிழ் மொழிக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சிறப்பாகும் என்று புகழப்படுகிறது.

தமிழிலுள்ள இன்ப இலக்கியங்க ளெல்லாம் சிறிதும் முறை பிறழாது அகப்பொருள் இலக்கணத்தை ஒட்டியே அமைந்துள்ளன. மேலும், பெரும்பாலான தமிழிலக்கியங்கள் இன்பத்துறை பற்றியனவாக இருப்பது ஆராய்தற்குரியது. வேறு துறைகள் பற்றிய சிலவகை இலக்கியங்கள் கூட இடையே இன்பத் துறையைக் கலக்க மறப்பதில்லை. சங்க கால எட்டுத்தொகை நூற்களுள், நற்றினை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/19&oldid=514715" இலிருந்து மீள்விக்கப்பட்டது