பக்கம்:இன்ப வாழ்வு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இன்ப வாழ்வு


5. ஆண் பெண் உறவில் தாறுமாறாக நடந்து சீரழிவோர்க்கு உண்மையான அன்பு (காதல் வாழ்க்கையின் அருமை பெருமையினை எடுத்தோதி, அவர்களையும் நேரிய நெறியில் செலுத்த வேண்டும் என்பதே இன்ப இலக்கியங்களின் நோக்கம்!

இப்படிப் பல விளக்கங்கள் தந்துகொண்டே போகலாம்.

மேற்கூறியவற்றுள் முன்னைய நான்கு காரணங்களால் இன்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்குமாயின், அவற்றை அவ்வளவு சிறப்புடையனவாகக் கொள்ள முடியாது. இறுதியாக ஐந்தாவதாகக் குறிக்கப்பட்டுள்ள நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இன்ப இலக்கியங்கள் படைக்கப்பட்டிருப்பதால்தான் அவற்றைச் சிறந்தனவாகக் கொள்ளமுடியும் - வரவேற்றுப் போற்றமுடியும்.

ஆம்! நெறி பிறழ்ந்த மக்களைத் திருத்தி, உள்ளம் ஒன்றிய காதல் மனைவாழ்க்கையில் உய்ப்பதற்காகவே பண்டைக் காலத்தில் இன்ப இலக்கியங்கள் படைக்கப் பட்டிருக்கவேண்டும். அம்மரபு வழிவழி வந்த இலக்கியங் களிலும் போற்றிக் காக்கப்பட்டு வந்திருக்கிறது. இவ் வுண்மை உணராத சிலர் நாளடைவில் தாறுமாறான முறையில் இன்ப இலக்கியம் எழுதவும், தவறான முறையில் இன்ப இலக்கியங்களைப் புரிந்துகொள்ளவும் முற்பட்டு விட்டனர். அது அவர்களின் தவறே!

அந்நாள் தொட்டு இந்நாள் வரை, நல்லாசிரியரால் இயற்றப்பெற்ற எந்த இன்ப இலக்கியத்தை நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/23&oldid=514719" இலிருந்து மீள்விக்கப்பட்டது