பக்கம்:இன்ப வாழ்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் சுந்தர சண்முகனார்

25


ஏற்றுக்கொள்வதற் கில்லை. அது அவரவருடைய தனி யுரிமை-அதில் தலையிடுவதற்குப் பிறர்க்கு உரிமை கிடையாது என்று தட்டிக் கழித்துவிட முடியாது. இப்படியே விட்டால், எவரும் எதுவும் செய்யத் தலைப் படுவர்-பிறகு அவரை ஒருவரும் கண்டிக்க (தண்டிக்க) முடியாமற் போகலாம். எனவே, தக்க காரணங்களுடன் இந்தப் போக்கைக் கண்டித்துத் திருத்துவது நமது தலையாய கடமையாகும். கண்டனத்துக்குரிய காரணங்களாவன:

1. மாறுபட்ட உருவ அமைப்புடன் ஆணும் பெண்ணுமாய்ப் படைத்திருக்கின்ற இயற்கையின் நோக்கமே, இரு சாராரும் மணந்து வாழவேண்டும் என்பதே.

2. இயற்கையின் முறையீடாகிய காம உணர்வை அடக்குவது எவர்க்கும் அரிது, அடக்கவுங் கூடாது.

3. நீண்டநாள் மணந்துகொள்ளாது தனித்து வாழ்ந்த சிலர், பின்னர் அத்தனிவாழ்க்கையில் தோல்வி யுற்று வயதான காலத்தில் மணந்துகொண்டிருக்கிளறனர்.

4. இறுதிவரையுமே மணந்துகொள்ளாத சிலர் இடையிடையே தவறிவிட்டிருக்கின்றனர்.

5. இறுதி வரையுமே மணந்து கொள்ளாமலும் இடையேயும் தவறாமலும் வெற்றிகண்டிருக்கிற சிலரும், இயற்கை நோயாகிய காம உணர்வைத் தணிப்பதற்கு எவ்வளவோ போராடியிருப்பர்-அதற்காகத் தம் உயிராற்றலை எவ்வளவோ செலவழித்திருப்பர். இந்த வீண் தொல்லை ஏன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/26&oldid=514721" இலிருந்து மீள்விக்கப்பட்டது