பக்கம்:இன்ப வாழ்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இன்ப வாழ்வு


6. திருமணம் செய்துகொள்ளாதவர்கள், இல்வாழ்க் கையால் பெறக்கூடிய எத்தனையோ வாய்ப்பு வசதிகளைஎத்துணையோ வளங்களை-எவ்வளவோ நற்பேறுகளை வீணாய் இழந்து விடுகின்றனர்.

7. இவர்கள் திருமணம் செய்துகொள்ளாது தப்பித்துக்கொண்டார்கள்; ஆனால் இவர்கட்கு அன்றாடம் தேவைப்படுகின்ற உணவு ஆக்குதல், பிணி வந்துவிடின் மருத்துவ வேலை, வயதான காலத்தில் பணிவிடை, சாவுப்படுகையில் மலம் வாருதல் முதற்கொண்டு செய்யும் தொண்டு-இன்ன பிறவற்றை யார் ஆற்றுவது? திருமணம் செய்துகொண்டு வாழும் குடும்பத்தார்கள்தாமே இவர் கட்கு இவையெல்லாம் செய்யமுடியும் - செய்தும் வருகின்றார்கள்? இவர்கள் மீந்துகொள்ள இன்னொருவர் உழைப்பதா? இது என்ன முறை?

8. மேலும் இவர்களுடைய பெற்றோர்கள் வயது முதிர்ந்து வருந்துங் காலத்தில், அவர்கட்கு உணவு முதலிய வசதிகளை இவர்கள் எவ்வாறு செய்தளிக்க முடியும்? அது இவர்களுடைய இன்றியமையாக் கடனாயிற்றே: அப்போது இன்னொருவரது கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

9. விருந்தினர், இரவலர் முதலியோர் வரின் என்ன செய்வார்கள்? இவர்கள் பாடே திண்டாட்டமாயிற்றே!

10. ஐயோ, நமக்கென்று மனைவியோ-கணவனோ, மக்களோ இல்லையே! நாம் என்ன செய்வது! நமக்கு யார் உதவப்போகிறார்கள்? நாம் எப்படி வாழப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/27&oldid=550756" இலிருந்து மீள்விக்கப்பட்டது