பக்கம்:இன்ப வாழ்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

27


போகிறோம் - எவ்வாறு பிழைக்கப்போகிறோம்? என்று ஏங்கித் தவிக்கக்கூடிய இக்கட்டான நிலை இவர்களுக்கு வாழ்க்கையில் பலமுறை நேர்ந்தே தீரும். அப்போதெல்லாம் இவர்கள் தேள் கொட்டிய திருடன் போல விழிப்பார்கள். யாரிடம் சொல்லி நோவது

எனவே, ஆணாகட்டும்-பெண்ணாகட்டும்! திருமணம் செய்துகொள்ளாமல் தனித்து வாழலாகாது; மணந்து இணைந்தே வாழவேண்டும், என்பது தெளிவாகுமே!

இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்த்தான் பண்டைத் தமிழன் மக்களினத்திலே அறிவாலும் பண்பாலும் அவன் முதிர்ந்தவன் அல்லவா - முற்பட்டவன் அல்லவா! அதனால்தான், ஒருவன் ஒருத்தியையும் - ஒருத்தி ஒருவனையும் மணந்து இறுதிவரையும் இணைபிரியாது இன்பமாய் இல்லறம் நடத்தி வாழவேண்டும், என இன்ப இலக்கியங்கள் பல படைத்தான் பழங்காலத்தமிழன். இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழன் உணர்ந்து பின்பற்றிவரும் இந்த நாகரிகத்தை, இவ்விருபதாம் நூற்றாண்டில்கூட இன்னும் சில பகுதியினர் உணராமல் இருக்கின்றனரே! அந்தோ அவர் அளியர்!

இன்ப இலக்கியத்தின் நோக்கம் இப்பொது புரியுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/28&oldid=550757" இலிருந்து மீள்விக்கப்பட்டது