பக்கம்:இன்ப வாழ்வு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

29


சொல்லவில்லை. அவனையறியாது அந்நுகர்ச்சியின் தேக்கெறிவு சொற்களாக வெளிப்படுகின்றது. அந்தக் கனிவாய்ச் சுவை அவனது உயிர்க்கு இனிதாம்-இனிக் கின்றதாம். அது மட்டுமா? அமிழ்தாகி அவனது ஆருயிர்க்கு எழுச்சி நல்குகின்றதாம்? ஒரு முறையா? இரு முறையா? பலப்பல முறையும் இனிக்கின்றதாம். ஆருந் தோறும் ஆருந்தோறும்-அனுபவிக்குந்தோறும் அனுபவிக்குந் தோறும் அமிழ்த மகிழ்வு மிகுகின்றதாம்; மிகுந்து கொண்டே இருக்கின்றதாம்.

இது அவனது பட்டறிவு (அநுபவம்). அதாவது தலைசிறந்த தமிழ் மகனது பட்டறிவு. ஆண்டுக்கு இரு முறை மும்முறை மண விலக்குச் செய்து கொண்டு மறுமணம் புரிந்து கொள்கின்ற மன வளர்ச்சியற்ற மாக்களுக்கு இது விந்தையினும் விந்தை! வியப்பினும் வியப்பு பழகப் பழகத் தமிழனுக்கு மனைவிமேல் இனிப்பு மிகுகின்றதே தவிரக் குறையவில்லை; கசப்பாக மாறவும் இல்லை. எதைப்போல...?

இங்கேதான் பார்த்துப் பதிலிறுக்கவேண்டும்! கனிவாய் இன்பத்துக்கு எதனை உவமையாக்குவது? ‘பழகப் பழகப் பாலும் புளிக்கும்’ என்கின்றனரே. பாலே-தீம்பாலே இத்தகையது எனின், வேறு எத்தகைய இனிப்புப் பொருளை ஈண்டு இயம்புவது? அப்பழமொழியே சொல்லுகிறதே. பாலும்’ என்பதிலுள்ள உயர்வு சிறப்பு உம்மையே தெரிவிக் கிறதே. நாடோறும் நமக்கு நல்லுணவாகின்ற பாலுமே புளிக்கும் என்றால் பின்பு பேசுவானேன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/30&oldid=550760" இலிருந்து மீள்விக்கப்பட்டது