பக்கம்:இன்ப வாழ்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

31


எத்துணை உயர்ச்சியுடையது. இஃது எங்கிருந்து பெறப் பட்டது? இங்கிருந்துதான்:

‘தேருந்தொறும் இனிதாங் தமிழ்போன்று

இவள் செங்கனிவாய் ஆருக்தொறும் இனிதாய் அமிழ்தாம்

என தாருயிர்க்கே’’

(தஞ்சைவாணன் கோவை-59)

என்னுஞ் செய்யுட் பகுதியிலிருந்துதான். இச் செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது? ‘பொய் பிறந்தது புலவர் வாயிலே’ என்பர் சிலர். இல்லையில்லை; புலவர்கட்குள் ளேயே பொய்யாமொழிப் புலவர்” பாடிய செய்யுள் இது. ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத் தமிழ் மிகமிக இனிக்கும் என்பது முடிந்த கருத்து.

தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள் இதனை உணர்வர், நம்புவர். கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணர வேண்டும் - உணர முடியும் அல்லவா? இந்தத் தஞ்சைவாணன் கோவைச் செய்யுளால், தமிழின்பம் எத்துணை உயர்ந்தது - எத்துணை சிறந்தது என்பது புலனாகுமே! இச் செய்யுளோடு ஒத்த கருத்துடைய இன்னொரு செய்யுள் தண்டியலங்காரம் என்னும் அணி யிலக்கண நூலின் உரையில் காணக் கிடக்கின்றது. அதன் கருத்தாவது:

செவியை அளக்கக் கூடியவையும் சிந்தையிலே நின்ற அளவில் இன்பம் நிறைக்கக் கூடியவையும் ஆய பொருள்கள் உலகில் இரண்டு உள்ளன. அவற்றுள் ஒன்று: பெண்ணின் நோக்கு; மற்றொன்று; ஒட்டக் கூத்தரது வாக்கு, இதனை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/32&oldid=550762" இலிருந்து மீள்விக்கப்பட்டது