பக்கம்:இன்ப வாழ்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இன்ப வாழ்வு


‘சென்று செவியளக்கும் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே

கின்றளவில் இன்பம் கிறைப்பவற்றுள் - ஒன்று மலரிவரும் கூந்தலார் மாதர்நோக்கு ஒன்று மலரிவரும் கூத்தன்றன் வாக்கு’

என்னும் தண்டியலங்கார உரைச் செய்யுளால் உணரலாம். பெண்களின் கண்கள் தமக்கும் காதுகளுக்கும் உள்ள தொலைவினை அளப்பவைபோல் காதுகளை நோக்கி நீண்டிருப்பதாலும், கூத்தரது தமிழ் வாக்கும் கேட்பவரது செவி நோக்கிச் சென்று புகுவதாலும் சென்று செவி யளக்கும் செம்மையவாய்’ என்னும் பொதுத்தன்மை இரண்டிற்கும் இயம்பப்பட்டது. ஒருவன் தன் காதலியின் கண்ணோக்கினை நினைத்த அளவில் அவனது சிந்தையில் இன்பம் தோன்றுவது போலவே, கூத்தரது அருள் தமிழ் வாக்கை நினைத்தாலேயே நெஞ்சத்தில் பேரின்பம் மிகுமாம்; இது குறித்தே சிந்தையுள்ளே நின்றளவில் இன்பம் நிறைப்பவை என இரண்டிற்கும் பொதுத் தன்மை புகலப் பட்டுள்ளது. ஈண்டு ஒட்டக்கூத்தரது வாக்கு என்பது, அவர் எழுதிய தமிழ் நூற்களையே குறிக்குமன்றோ? எனவே, பெண்ணின்பத்திற்கு எந்த வகையிலும் தமிழின்பம் குறைந்ததாகாது; இன்னும் கேட்டால் சிறந்ததாகவே இருக்க முடியும் என்று நுனித்துணரலாமே!

மேற்கூறிய இரு நூற்களின் செய்யுட்களோடு ஒத்த கருத்துடைய சிறந்த செய்யுளொன்று, மாணிக்கவாசகரால் அருளிச் செய்யப்பட்ட திருக்கோவையார் எனப்படும் திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் நூலிலும் பொலிந்து மிளிர்கின்றது. அதன் கருத்து:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/33&oldid=550763" இலிருந்து மீள்விக்கப்பட்டது