பக்கம்:இன்ப வாழ்வு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இன்ப வாழ்வு


என்று கேட்பதுபோல் மிக இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். இப்பாடல்தொடரில், சூரியகாந்தி மலரின் கணவனாகச் சூரியனைக் குறிப்பிடுகிறார். அம் மலர் தன் மணவாளனாகிய கதிரவனையே என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறதாம். நேயம் மிகுந்தவன் ஆதலால் அவன் தன்மேல் காய்வதற்கும் வருந்த வில்லையாம். அவனை மேன்மேலும் மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து முகம் மினுக்கி மாயப் பொடியும் (மகரந்தத் தூள்) வீசுகிறதாம். இந்தப் போட்டிக் காட்சியைக் கதிரவனது மற்றொரு மனைவியாகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் சிரிக்குமாம்அல்லது கவலையால் கண்ணிர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல் இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது.

சூரிய காந்திப் பூவுக்கும் தாமரை மலருக்கும் கதிரவனைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,

‘சகட சக்கரத் தாமரை நாயகன்’ என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கையுலாவில்,

“செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு

கந்தா மதிற் கெரடிகள் கட்பாட’’ என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்’ என்னும் பெயர்கள் உளவாதலும் அறியப் பெறும். நாயகன்-நாதன் என்றால் கணவன்தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/37&oldid=550767" இலிருந்து மீள்விக்கப்பட்டது