பக்கம்:இன்ப வாழ்வு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

39


விடினும், சிற்றுார்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவினைப் பறித்துப் பாவாடை கட்டிய பெண்குழந்தை போல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்து விட்டு அடியிலிருக்கும் காய்ப்பகுதியைக் கம்மலாகவும் பம்பரமாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே. அதைப்பற்றித் தெரிந்து கொள்வது, மற்ற பூக்களைப்பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துணைபுரியும்.

பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. காம்புக்கு ‘விருந்தம் (P. dic i) என்று பெயர் கூறுகின்றனர் மர (தாவர) நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி முடிக்கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது முடிக்கொண்டிருக்கும் இக்கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற்புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப்பூக்கிண்ணத்தை புஷ்பகோசம் (calyx) என்றழைக்கின்றனர்.

புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங்கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக்கம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/40&oldid=550771" இலிருந்து மீள்விக்கப்பட்டது