பக்கம்:இன்ப வாழ்வு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இன்ப வாழ்வு


வற்றை ‘ஏகலிங்கச் செடிகள்’ என்பர். தமிழில் ‘ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள்’ என்று சொல்லலாம்.

மகரந்தச் சேர்க்கை ஒரே பூவில் ஆண் பாகமும் பெண் பாகமும் இருந்தால், ஆண் பாகத்திலுள்ள மகரந்தத் துணுக்குக்கள் பெண் பாகத்தோடு தொடர்புகொண்டு கருவுற்றுக் காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் தன் மகரந்தச் சேர்க்கை என்று பெயராம். ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாயிருக்குமானால், காற்று, வண்டு, தேனி, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண் பூவிலுள்ள மகரந்தத் துணுக்குக்கள் பெண்பூவிற்கு வந்து தொடர்புறுவதால் கருவுற்றுக் காய் காய்க்கும். இதற்குப் பிறமகரந்தச் சேர்க்கை என்று பெயராம்.

இனிமேல்தான் மலர்களின் காதல் வாழ்வை நாம் ஆழ்ந்து ஆராயவேண்டும். செகதீச சந்திரபோசு கூறியுள்ளாங்கு, அவற்றிற்கும் எல்லாவகை உணர்வுகளு முண்டு.

பெரும்பாலும் மலர்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல், பிற மகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. உலகியலில்கூட மணமக்கள் சிலர், சொந்தக்காரப் பெண் அல்லது ஆணின்மேல் கவர்ச்சி கொள்ளாது புதியவரையே விரும்பி நாடுவதைக் காண்கிறோமே! விஞ்ஞான முறைப்படி நோக்கின், சொந்தக்கார மணமக்களுக்குப் பிறக்கும் குழந்தைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/43&oldid=550774" இலிருந்து மீள்விக்கப்பட்டது