பக்கம்:இன்ப வாழ்வு.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இன்ப வாழ்வு


வேலம்பாசிச் செடிகள் இந்த ஒவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி, இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி, ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று மிதந்துகொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை மட்டும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு நீட்டி ஆண்பூவோடு தொடர்பு கொள்வதையும் காணலாம்.

எனவே மக்கள் மட்டுமே மனையறம் ஓம்பிப் பிறர்க்கும் பயன்படுகிறார்கள் என்று எண்ணுவதற்கில்லை; அஃறிணையாகிய மரஞ் செடி கொடிகளின் மலர்களுங்கூட மனையறம் நடாத்திப் பல்வகை உயிர்கட்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/49&oldid=550780" இலிருந்து மீள்விக்கப்பட்டது