பக்கம்:இன்ப வாழ்வு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

51


நூலுள், பறவை-விலங்குகளைப் போலவே தேவர், நாகர், மக்கள் ஆகிய அனைவருமே ஐந்து அறிவு உயிர்கள் என்று கூறியுள்ளார். இது வியப்பாக இல்லையா?

‘வானவர் மக்கள் கரகர் விலங்குபுள்

ஆதி செவியறிவோடு ஜயறி வுயிரே” என்பது நன்னூல் நூற்பா.

ஒரு வேளை, தெய்வத் தன்மையும் மக்கட் பண்பும் நாளாக நாளாகக் குறைந்து கொண்டு வருகின்றன என்று இதற்குப் பொருளோ? அல்லது பவணந்தியார் சரியாகச் சொல்லவில்லையா? அல்லது தொல்காப்பியர் கூறியது சரியில்லையா? எப்படியாவது இருக்கட்டும்! தொல்காப்பியர், பவணந்தியார் ஆகிய இருவர் கூற்றுக்களிலிருந்துமே, பறவை விலங்குகட்குள்ளும் மக்களுக்கு நிகரானவை உள்ளன என்னும் கருத்தை ஈண்டு நாம் சாறாகப் பிழிந் தெடுத்துக் கொள்ளலாம். மக்களுக்குள்ளேயே பறவை விலங்குகளைவிட கேடு கெட்டவர்கள் இருக்கும்போது அப்பறவை விலங்குகட்குள்ளேயே உயர்ந்த மக்கட் பண்பு டையவை ஏன் இருக்கக்கூடாது? இருக்கக் கூடுமே! அவ்வாறு உயர்மக்களைப் போல் ஆறறிவு உடையவைகள், அன்றில், அன்னம், புறா, கிளி முதலிய பறவைகளும், மான், குரங்கு, யானை முதலிய விலங்குகளுமாம்.

எனவே, மக்கள் ஆணும் பெண்ணுமாய் இணைந்து இன்பமாய் இல்லறம் நடத்துதல்போலவே ஒருசில பறவை விலங்குகளுங்கூட, முறையாக ஆணும் பெண்ணுமா யிணைந்து இன்பமாய் இல்லற வாழ்வு நடத்தக்கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/52&oldid=550784" இலிருந்து மீள்விக்கப்பட்டது