பக்கம்:இன்ப வாழ்வு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இன்ப வாழ்வு


என்னும் அமிழ்தப் பாடல்களாலும், மற்றும் மணிமேகலை என்னும் காவியத்தில் உள்ள,

‘அன்றில் பேடை அளிக்குரல் அழைஇச்

சென்றுவீழ் பொழுது சேவற்கு இசைப்ப’

என்னும் அடிகளாலும், மனோன்மணியத்திலுள்ள. “எங்கிருந் தன இவ் அன்றில் பேய்கள்!

நஞ்சோ காவிடை நெஞ்சங் துளைக்கும்!” என்னும் அடிகளாலும், இன்னும் பல இலக்கியங்களாலும் நன்கறியலாம்.

அன்றிற் பேடையுஞ் சேவலும் உயிர்க்குயிராய் ஒன்றி வாழும் இன்பவாழ்வு உள்ளத்தை உருக்குகிற தன்றோ? காலையில் மணந்து மாலையில் மணவிலக்குச் செய்து கொள்ளும் மக்கள் -இல்லையில்லை-மாக்கள் இதனை உணரவேண்டும். அடுத்து அன்னப் பறவையை எடுத்துக் கொள்வோம்.

அன்னம்

நேரே பார்த்திராவிடினும் அன்றிலைவிட அன்னப் பறவையைப் பற்றி மக்கள் மிகவும் அறிந்திருப்பர்; பல நூல்களிலும் படித்திருப்பர். அன்னம் வெண்மையான பறவை என்ற செய்தியும், நாம் விலைக்கு வாங்குகின்ற பால் கலந்த நீரை இல்லை யில்லை-நீர் கலந்த பாலை அன்னப் பறவையின் முன்பு வைத்தால், அது பால் வேறுநீர் வேறு பிரித்துப் பாலை மட்டும் பருகும் என்ற செய்தியும் நமக்குத் தண்ணீர் பட்டபாடு. அன்னப் பறவையைப் பற்றிப் பல இலக்கியங்களில் பல செய்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/55&oldid=550787" இலிருந்து மீள்விக்கப்பட்டது