பக்கம்:இன்ப வாழ்வு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

55


பேசப்பட்டிருப்பினும், அதன் இன்ப இல்லற வாழ்வைப் பற்றி மணிமேகலை என்னும் காவியத்தில் காணப்படும் காட்சி யொன்றினை மட்டும் ஈண்டு நாம் காண்போம்:

ஓர் அன்னப் பெடையும் ஓர் அன்னச் சேவலும் ஒரு தாமரைப் பொய்கையில் வாழ்ந்து வந்தனவாம். இரண்டும் இணை பிரியாது ஆடியும் ஒடியும் நீந்தியும் பறந்தும் களிக்குமாம். ஒரு நாள் பொழுது சாயும் வேளை, பெடையானது விரிந்திருந்த ஒரு பெரிய தாமரை மலரில் விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது மாலை நேர மாதலின், அத்தாமரை மலர் தன் மேல் விளையாடிக் கொண்டிருந்த அன்னப் பெடையையும் சேர்த்து முடிக் கொண்டதாம். மாலையில் தாமரை கூம்பிக்குவிவது இயற்கைதானே! பெடைக்கோ ஒன்றும் ஓடவில்லை; எங்கிருக்கிறோம்-எப்படி இந்த இருட்டறையில் அகப் பட்டுக் கொண்டோம்-சேவல் எங்கே இருக்கிறது-அதை எப்படி எப்போது அடைவது-என்றெல்லாம் பல எண்ணிற்று; செய்வதொன்றும் அறியாது திகைத்துத் திக்குமுக்காடியது.

அந்நேரம் எங்கேயோ கவனமாயிருந்த சேவல் அன்னம் திடீரெனத் திரும்பிப் பார்த்தது-பெடையைக் காணவில்லை. அது எங்கே சென்றதோ-அதற்கு என்ன நேர்ந்ததோ என்று ஏங்கிக் கவன்றது. எப்படியாவது உயிர்க் காதலியைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டுமே! என்ன செய்வது! குறிப்பாகப் பெடை விளையாடிக் கொண்டிருந்த தாமரை மலர்ப்பக்கம் கண் பார்வையை ஆராயவிட்டது. குவிந்திருந்த அம்மலர் இயற்கைக்கு மாறாகப் பெரிதாயிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/56&oldid=550788" இலிருந்து மீள்விக்கப்பட்டது