பக்கம்:இன்ப வாழ்வு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இன்ப வாழ்வு


தமையாலும், ஆடியசைந்து அலைக் கழிக்கப்பட்டுக் கொண்டிருந்ததாலும், உள்ளிருந்து எழுந்த ஒலிக் குறிப் பாலும், அம் மலராகிய சிறைக்குள்ளேதான் தன் பெட்டை அடைக்கப்பட்டிருக்கிறது என்று துணிந்து மலரின் இதழ்களைக் கிழித்துப் பெடையை விடுதலை செய்தது. உடனே அதை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த ஓர் உயர்ந்த தென்னை மரத்தின் மடலில் ஏறிக்கொண்டு மகிழ்ச்சியடைந்ததாம். இந்த அன்னப் பறவைகளின் அன்பு வாழ்க்கை எத்துணை இனியது பாருங்கள்! இந்த அன்புக் காட்சியினை,

‘அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப் பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு ஓங்கிருந் தெங்கின் உயர்மடல் ஏற” என்னும் மணிமேகலைப் பகுதியில் காணலாம். இந் நிகழ்ச்சியில் காவியப் புலவர் சாத்தனாரின் கற்பனையும் கலந்திருந்தாலும், நாம் நயந்து மகிழத்தக்க நயங்களும் இப்பகுதியில் உண்டு. மனைவியைப் பேணிக் காக்க வேண்டும் என்பதில் ஆண் அன்னத்திற்கு இருக்கும் அக்கறையும் ஆர்வமும் விரைவும் நமக்குப் புலப்படுமே. இப்பாடல் பகுதியிலுள்ள ‘தன்னுறுபெடை’ என்னும் தொடரை நோக்குக! தனக்கு உற்ற மனைவி’ என்பது அதற்குப் பொருளன்றோ? உற்ற மனைவி என்பதில், மனையாளுக்கு இருக்க வேண்டிய பேரிலக்கணங்கள் அத்தனையும் அடங்கி விடவில்லையா? மக்களுக்குள் ஒருவர்க்கு உற்றவர் ஒருவரே-பலரல்லர் என்னும் கற்புடைமை போல, அன்னங்களுக்குள்ளும், ஒன்றுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/57&oldid=550789" இலிருந்து மீள்விக்கப்பட்டது