பக்கம்:இன்ப வாழ்வு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

57


உற்றது ஒன்றே தனக்குத் தனக்கு உரிய ஆணையோ அல்லது பெண்ணையோ தவிர, வேறொன்றை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்னும் ஒழுங்கு நெறிக் கற்புக் கடப்பாடு உண்டென்பதை இந்தத் ‘தன்னுறு பெடை’ என்னுந் தொடர் அறிவிக்கவில்லையா?

அடுத்து பெடை கொண்டு என்னும் தொடரை நோக்குக. ஏதோ முட்டை முடிச்சுகளையோ அல்லது சிறு குழந்தைகளையோ எடுத்துக் கொண்டு-தூக்கிக் கொண்டு செல்வதைப் போல, சேவல் அன்னம் பெடை.யன்னத்தைக் கொண்டு சென்றது என்னும் குறிப்புப் பாருள் இத் தொடரில் புலப்படவில்லையா? உண்மையில் அப்படியா நடந்திருக்க முடியும்? பெண் அன்னமும் பறந்துதான் சென்றிருக்கும். ஆயினும், இந்நேரம் அது இதழ்களுக்குள் அடைப்பட்டுக் கிடந்து நொந்து போயிற்று என்னும் பரிவால்-பற்றுணர்வால் அதை ஏந்தி எடுத்துக்கொண்டு செல்வது போல் சேவல் அன்னம் நெருங்கித் தாங்கிச் சென்றுள்ளது என்னும் நயத்தைப் பெடைகொண்டு’ என்னும் தொடர் நல்கவில்லையா?

அடுத்து ஓங்கிருந்தெங்கின் உயர்மடல் ஏற’ என்னும் நயஞ்செறிந்த தொடரை நோக்குக. தண்ணீரிலே தாமரையிலே பொழுது போக்கிக் கொண்டிருந்த அன்னங்கள், தாமரை மலரால் ஏற்படவிருந்த உயிர்க் கேட்டினின்றும் தப்பிப் பிழைத்த பிறகு யாது செய்தன? நாம் என்ன செய்வோம்? அஞ்சத்தக்க-இடரான இடத்தில் சிக்கித் தவித்த எந்த உயிரும் அவ்விடத்தை விட்டு வெகு தொலைவிற்கப்பால் அகல முயல்வது இயற்கைதானே! அவ்வாறே இந்த அன்னங்களும், தங்களைத் தவிக்கச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/58&oldid=550790" இலிருந்து மீள்விக்கப்பட்டது