பக்கம்:இன்ப வாழ்வு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இன்ப வாழ்வு


செய்த தாமரைப்பூ இலைகளை விட்டு, அத்தாமரை இருக்கும் தண்ணீரில் நீந்தியும் மிதந்தும் வாழ்வதையும் விட்டு, அத் தண்ணீரின் அருகிலுள்ள தரையினையும் விட்டு, அத்தரை மட்டத்தில் தாழ்ந்து குறுகியுள்ள மரஞ் செடி கொடிகளையும் விட்டு, ஓங்கி வளர்ந்துள்ள பெரிய தென்னை மரத்தின் உயரமான மடலில் ஏறிக் கொண்டனவாம். உண்மை தானே! இப்பகுதி சுவைப்ப பதற்கு எத்துணை இனியது!

ஈண்டு உலகியல் செய்தி யொன்று என் நினைவிற்கு வருகிறது. நான் ஒரு முறை, நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்று சொல்லப்படுகின்ற வகுப்பார் மிகுந்து வாழும் செட்டிநாட்டுப் பக்கம், அவ்வகுப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவரைக் காணச்சென்றபோது அப்பகுதி நீர்வளம் இன்றி வரண்டுகிடப்பதையும், வீடுகள் - குறிப்பாக நண்பரின் வீடு மிக உயரமான அடித்தளத்தின்மேல் எழுப்பப்பட்டிருப்பதையும் கண்டு, நண்பரை நோக்கி, “இங்கேதான் தண்ணீர் கிடையாதே - வெள்ளத்தைப் பற்றிய அச்சமும் வேண்டியதில்லையே; அப்படியிருக்க, இவ்வளவு உயரமான அடித்தளம் இட்டு வீடு கட்டியது எதற்காக?’ என்று வினவினேன். நண்பர் சுவையானதொரு விளக்கம் தந்தார்:

“எங்கள் முன்னோர்கள் சங்ககாலக் காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த வணிகர்கள், அது கடற்கரை நகராதலால், அடிக்கடி கடல் வெள்ளத்தின் அச்சுறுத்தல் இருந்துகொண்டே வந்தது. மணிமேகலை என்னும் காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்றுச் செய்தியின்படி, ஒருமுறை காவிரிப்பூம்பட்டினம் முழுதும் கடலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/59&oldid=550791" இலிருந்து மீள்விக்கப்பட்டது