பக்கம்:இன்ப வாழ்வு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

59


மூழ்கடிக்கப்பட்டது, சென்னை நகரத்தினும் சிறந்ததாய் அக்காலத்தில் இலங்கிய அப்பட்டினம் இன்று இல்லை யன்றோ? அக்கடல்கோளிலிருந்து தப்பிய எங்கள் முன்னோர், தண்ணீர் பற்றிய அச்சம் இல்லாத மேட்டுப்பாங்கான இராமநாதபுரம் மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து வந்து குடியேறினர். வெள்ளத்தினின்றும் தற்காத்துக் கொள்வதற்காக வீடுகளை மேடான அடித்தளத்தின்மேல் அமைத்தனர். இதனால் அவர்களுடைய உப்பு முதலிய வாணிகப் பொருள்களும் ஒதங்காத்துக் கெட்டுப் போகாமல் இருக்க முடியுமன்றோ?’ - இதுதான் என் நண்பரின் விளக்கம்.

கடல் வெள்ளத்தால் பன்முறை பாடுபட்டுப் பாடுபட்டுத் தேறிய அவ் வணிகர்களே போலத் தாமரை மலரின் தகாத செயலால் தவித்துப்போன அந்த அன்னங்கள் அத் தாமரைத் தடாகத்தை விட்டு உயரமான ஓரிடத்தில் ஏறிக் கொண்டது இயற்கைதானே! காவியப்புலவர் சாத்தனார், அன்னங்கள் ஏறிக்கொண்ட மரத்தின் உயரத்தை மிகுதிப் படுத்திக் கூறல் என்னும் அளவுகருவியின் வாயிலாக, பறவைகள் தாமரைத் தடாகத்தின்மேல் கொண்டிருந்த அச்சத்தின் மிகுதியை நமக்கு அளந்து காட்டியுள்ளார். தெங்கு (தென்னை) என்று சொன்னாலே போதும் - அது மிகவும் உயரமான பொருள் என்று எல்லோருக்கும் தெரியும். உலக வழக்கில்கூட மிக உயரமாருயிப்பவனைப் பார்த்து, தென்னை மரம்போல வளர்ந்து விட்டான் என்று சொல்கின்றனரல்லவா? சாத்தனாரோ, (ஒங்கு தெங்கு - இரும் தெங்கு) ஓங்கு இரும் தெங்கு என அடைமொழி களின் வாயிலாக அம் மரத்தின் உயரத்தை மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/60&oldid=550793" இலிருந்து மீள்விக்கப்பட்டது