பக்கம்:இன்ப வாழ்வு.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

63


‘தலைதாழ்த்திக் குடுகு டென்று

தனைச்சுற்றும் ஆண் புறாவைக் கொலைபாய்ச்சும் கண்ணால் பெண்ணோ

குறுக்கிற் சென்றே திரும்பித் தலைநாட்டித் தரையைக் காட்டி

‘இங்குவா’, என அழைக்கும். மலைகாட்டி அழைத்தா லுங்தான்

மறுப்பாரோ மையல் உற்றார்?’ ‘தாய் இரை தின்ற பின்பு

தன் குஞ்சைக் கூட்டிற் கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு

தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கை; தாய் அருந்தியதைக் கக்கித்

தன் குஞ்சின் குடல் கிரப்பும்: ஒய்ந்ததும் தந்தை ஊட்டும்,

அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்!” என்னும் பாடல்களிலிருந்து வடித்தெடுத்துக் கொள்ளலாம். எவ்வளவு சுவையான பாடல்கள்!

மக்களாகிய நாம் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று எண்ணிக்கொண் டிருக்கிறோமே - தொல்காப்பியர் கூறி யுள்ளபடி, பறவை யினங்கட்குள்ளும் எத்துணை உயர்ந்தவை உள்ளன. பாருங்கள்! அன்றில்களின் - அன்னங்களின் - புறாக்களின் இன்ப இல்லற வாழ்வு மக்களுள் தாறுமாறாய் நடப்பவர்க்கு ஓர் அறைகூவலன்றோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/64&oldid=550797" இலிருந்து மீள்விக்கப்பட்டது