பக்கம்:இன்ப வாழ்வு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

65


(பெண்) மானும் கலை (ஆண்) மானும் புரியும் காதல் வாழ்வு கவர்ச்சி மிக்கது. இத்தகு மான்களின் காதல் வாழ்க்கையினை, ஐந்திணை ஐம்பது என்னும் சங்க நூலில், மாறன் பொறையனார் என்னும் புலவர் மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். அவர், ஒரு தலைவன்-தலைவியின் காதல் மனைவாழ்விற் கிடையே அந்த மான்களின் அன்பு வாழ்க்கையை ஓர் அறைகூவலாக எடுத்து அமைத்துள்ளார். காதல் காவியத்தில் மான்களின் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடுதான் ஏது? இனி அக் காட்சியினைக் காண்போம்:

தலைவனைப் பிரிந்த தலைவி யொருத்தி பிரிவுத் துன்பம் பெறாது பொருமுகின்றாள். தலைவன் தன்னுடன் இருந்து தனக்கு ஆறுதல் அளிக்கவில்லை என்று அவல முறுகிறாள். தன் தோழியிடம் பின்வருமாறு பிதற்று கின்றாள்:

“என் அன்பு மிகு தோழியே! என் காதலர் அடிக்கடி என்னைவிட்டுப் பிரிந்து விடுகிறார். என் நினைவு அவருக்கு இருக்குமோ - இராதோ! அவர் செல்லும் வழியிலுள்ள காடுகளில் வாழும் அஃறிணை உயிராகிய விலங்குகளும்கூட ஆணும் பெண்ணுமாய் என்றும் இணை பிரியாது வாழுமே! அவற்றை அவர் பார்த்ததில்லையா? அல்லது பார்ப்பதே இல்லையா? அல்லது, பார்த்தும் அத்தகு உணர்வு தோன்றாதவராய் உள்ளாரா அவ் வழியாகச் சென்று வந்தவர்களின் வாயிலாக, ஆங்கு மான்கள் நடாத்தும் இந்த அன்புக் காதல் மனைவாழ்க்கை யினைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/66&oldid=550799" இலிருந்து மீள்விக்கப்பட்டது