பக்கம்:இன்ப வாழ்வு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இன்ப வாழ்வு


‘ஒரு முறை, காதலர்களாகிய ஒரு பிணைமானும் ஒரு கலைமானும் கோடையின் கொடுமையால் தண்ணீர் கிடைக்காமல் தவித்தனவாம். எங்கெங்கோ நீண்ட நேரம் சுற்றிப் பார்த்தும் பயனில்லை. இயற்கையாயிருந்த தாகவிடாயோடு சுற்றுவதால் ஏற்பட்ட களைப்பும் சேர்ந்து தாக்கி வருத்தியது. இன்னும் சிறிது நேரத்திற்குள் நீர் கிடைக்காவிடின் உயிரே போய்விடும். அந்நேரம் ஓரிடத்தில் ஒரு சிறு சுனை தென்பட்டது. மான்கள் இரண்டும் ஆவலுடன் சுனையை அணுகின. வரட்சியின் கொடுமையால் சுனையில் சிறிதளவு தண்ணீரே இருந்தது. ஒரு மான் குடிப்பதற்கும் போதாது அந்நீர். என்ன செய்வது-அதுவா யினும் கிடைத்ததே! அந்நிலையில் பெண்மான் ஆண் மானை நோக்கி, நம்முள் ஒருவர் குடிக்குமளவே தண்ணீர் உள்ளது; அதனால் நீங்கள் குடித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என வேண்டிக்கொண்டது. ஆண்மான் ஒத்துக்கொள்ளுமா? அன்பான பெண்ணை நோக்கி, ‘நான் இன்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தண்ணீர்த் தாகத்தைத் தாங்கிக் கொண்டிருக்கமுடியும்; உன்னால்தான் முடியாது; எனவே, நீ குடித்து உன் உயிரைக் காத்துக்கொள்’ என்று கூறியது. பெண் அவ்வாறு செய்யுமா? ஆணை நோக்கி, எனக்கு அப்படியென்றும் தாகம் இல்லை; நீங்களே பருகுங்கள்’ என்றது. ஆண் மறுத்தது. இப்படி நீண்ட நேரம் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுப்பதில் முதன்மை பெற முயன்றன. இறுதியில் பெண்மானே வெற்றிபெற்றதுஅதாவது, ஆண் மான்தான் முதலில் நீரைக் குடித்தது. ஆனால், அவ்வெற்றியைத் தனக்கே யுரித்தாக்கிக் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/67&oldid=550800" இலிருந்து மீள்விக்கப்பட்டது