பக்கம்:இன்ப வாழ்வு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

67


ஆண் ஒரு சூழ்ச்சி செய்தது. அதாவது, ஆண்மான் நீரை உறிஞ்சிப் பருகுவதுபோல் பாசாங்கு காட்டிற்று. ஒரு சொட்டுத் தண்ணீர்கூட உள்ளே போகவில்லை. பிறகு வாயைத் தண்ணீரைவிட்டு மேலே எடுத்துக்கொண்டு, பெண்ணை நோக்கி, யேவ்-யேவ் என்று பொய் ஏப்பம் விட்டது. என் காதலியே! நான் வயிறு நிரம்பக் குடித்து விட்டேன். இன்னும் குடித்தால் வயிறு வெடித்துவிடும் போலிருக்கிறது. இச் சுனைநீர் பருகப் பருக மேலும் மேலும் ஊறிப் பெருகுகிறது. எனவே இனி நீ பருகலாம்’ என அன்பு மொழி புகன்றது. அதனை உண்மையென்று பெண் நம்பித் தான் வயிறு நிரம்ப நீர் பருகியதாம்.’

என் இனிய தோழியே! இத்தகு அன்புக்காட்சிகள் பலவற்றை என் காதலர் தாம் சென்ற வழியில் கண்டிருக்க மாட்டாரா? ஓர் ஆண் மான் தன் மனைவிக்கு எவ்வளவு தண்ணளி செய்திருக்கிறது பார்த்தாயா? இதனைக் கண்டுமா என் கணவருக்கு என்மீது நினைவு வரவில்லை’ யான் செய்த பேறு இவ்வளவு தானோ!’ என்று தலைவி தலைவனது பிரிவாற்றாமையைத் தோழியிடம் கூறிப் புலம்புகிறாள். இந் நிகழ்ச்சியை ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலுள்ள,

“சுனை வாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன் கள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி’ (38) என்னும் அழகிய இனிய அமிழ்தப் பாடலால் அறியலாம். இப்பாடலிலுள்ள ‘காதலர் உள்ளம் படர்ந்த நெறி’ என்னும் தொடர் சாலவும் சுவைக்கத்தக்கது; அதாவது, “காதலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/68&oldid=550801" இலிருந்து மீள்விக்கப்பட்டது