பக்கம்:இன்ப வாழ்வு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

69


வழக்கம். குரங்கண்ணன் அந்தத் துறையில் பேர் போனவர். அத்தகு குரங்கினத்தின் கனிந்த காதல் வாழ்வை இலக்கியக் கண் கொண்டு ஈண்டு காண்போம்:

திரிகூட ராசப்பக் கவிராயர் என்னும் புலவர் குற்றாலக் குறவஞ்சி என்னும் தமது நூலில் குரங்குக் காதலைச் சுவை பெறக் கூறியுள்ளார். குற்றால மலையின் இயற்கை வளத்தைச் சிறப்பித்துக் கூறுமுகத்தான் குரங்குகளின் வாழ்வு பேசப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் நீர் வளமும் மலை வளமும் நிறைந் துள்ளன. மலையில் மரஞ்செடி கொடிகள் நன்கு பூத்துக் காய்த்துக் கனிந்து குலுங்குகின்றன. கனிகள் நிறைந் திருக்கும் இடத்தில் குரங்குகளுக்குக் குறைவே இரா தன்றோ! பழங்கள் என்றால் அவ்வினத்திற்கு மிகவும் பற்றாயிற்றே! ‘வாழைப்பழம் வேண்டாம் என்னும் குரங்கு கூட உண்டா?” என்பது பழமொழியாயிற்றே!

குற்றால மலையில் வானரங்கள் (ஆண் குரங்குகள்) பழங்களைப் பறித்துக்கொண்டு வந்து தத்தம் மந்திகளுக்கு (பெண் குரங்குகளுக்கு) ஈந்து கொஞ்சிக் குலவுமாம். மந்திகளுக்குக் கனி பறிக்கத் தெரியாதா என்ன! வானரங்கள் பறித்து வந்து வழங்க வேண்டுமா என்ன! தேவையில்லை-மந்திகளே கனி கொய்து புசிக்கமுடியும். இருப்பினும் மந்திமேல் உள்ள காதலினால் வானரம் கொண்டுவந்து கொண்டுக்கிறது. அம்மட்டில் ஆண் குரங்கு இன்பம் அடைந்து விட்டதா? இல்லையில்லை, மந்தியின் கையால் கனிவாங்கி உண்டு மகிழவேண்டும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/70&oldid=550804" இலிருந்து மீள்விக்கப்பட்டது