பக்கம்:இன்ப வாழ்வு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

71


குற்றால மனையில் ஆண் குரங்குகளே தாமாக வலியச் சென்று தம் பெண் குரங்குகளிடம் கெஞ்சிக் குழைவதால், அக்குற்றால மலைத் தலைவனும் எப்படியும் உன்னை விரும்பி ஏற்றே தீர்வான்’ என்று குறத்தி தைைவிக்கு ஆறுதல் கூறுவதாகவும் இதில் ஒரு நயம் மறைந்து கிடக்கவில்லையா? அதோடு கூட, நீ எங்கள் மலைத் தலைவனை மணந்துகொண்டால் அவன் உன்னைக் கை விடமாட்டான்; பரிவுடன் உன்னைப் போற்றிக் காப்பான். அதற்கு வானரங்களின் செயல் சான்று!” என்று குறத்தி உறுதிமொழியளிப்பதாகவும் ஒரு பொருள் இதனுள் பொதிந்து கிடக்கவில்லையா? இலக்கியச் சுரங்கத்தை அகழ அகழ எத்துணை வளங்கள்- எத்தனை வைரங்கள் கிடைக்கின்றன பார்த்தீர்களா!

ஓர் ஆண் குரங்கு (கடுவன்) தான் காதலிக்கும் பெண் குரங்கைத் (மந்தியை) தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு மந்தியின் கூட்டமிகுந்த சுற்றத்தாரிடம் குறையிரப்பதாக ஒரு குறிப்பு கலித்தொகை என்னும்சங்க நூலில் சொல்லப்பட்டுள்ளது. அது வருமாறு:

‘கல்லாக் கடுவன் கணமலி சுற்றத்து

மெல்விரல் மந்தி குறைகூறும் செம்மற்றே

தொல்லெழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்

அல்லற் படுவான் மலை’ (40) இது கபிலர் பாடிய குறிஞ்சிக் கலியில் உள்ள பகுதியாகும். இது கபிலரது கற்பனையாக இருப்பினும், தலைமகன் முறைப்படி மணம் பேசித் தலைமகளை மணந்து கொள்ள வேண்டும் என்பதை அறிவிக்க எழுந்த உள்ளுறை யுவமம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/72&oldid=550806" இலிருந்து மீள்விக்கப்பட்டது