பக்கம்:இன்ப வாழ்வு.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இன்ப வாழ்வு


‘கொடிமதில் பாய்ந்திற்ற கோடும், அரசர் முடியிடறித் தேய்ந்த ககமும்-பிடிமுன்பு பொல்லாமை காணிப் புறங்கடை கின்றதே கல்லார்தோள் கிள்ளி களிறு,’

என்னும் முத்தொள்ளாயிரப் பாடலால் அறியலாம்.

ஆடவர் பெண்டிர்முன் அழகிய தோற்றத்துடன் காட்சி யளிக்க வேண்டுமென்று விரும்புவதுபோலவே களிறும் பிடியின்முன் பொலிவுமிக்க தோற்றத்துடன் போகவேண்டு மென்று விரும்பியிருக்கிறது பாருங்கள்! இப்பாடலைத் துருவத் துருவ மேலும் சுவையுணர்வுகள் தோன்றுகின்றன. தன் ஒடிந்த கொம்புகளையும் சிதைந்த நகத்தையும் கண்டு, தான் எதிரிகளிடம் அடிபட்டு - உதைபட்டுத் தோற்றோடி வந்துவிட்டதாக நம்பித் தன்னைப் பேடி என்று பிடி கருதிவிட்டால் என்ன செய்வது என்றும் களிறு நாணிக் கலங்கியிருக்கலாமல்லவா? அப்படியெனில், பிடியானது பெரிய அளவில் தன் களிற்றிடம் வீரத்தை எதிர் பார்த்திருக்கக்கூடும்! ஒருவேளை இப்படியும் இருக்கலாமோ! அதாவது, நம் கணவரது கொம்பும் நகமும் சிதைந்ததால் அவரது உடல் நோகுமே-அவர் துன்புறுவாரே என்று பிடி இரங்கிப் பரிவுற்றுக் கவன்று வருந்தும் என்று களிறு கருதியிருக்கலாம். பிடிக்குப் பெரு மகிழ்வு செய்வதற்குப் பதில் பெருங்கவலை உணடாக்கக் கூடிய அளவில் நாம் இருக்கிறோமே என்று களிறு தன் நிலைக்கு நாணிக் கவலைகொண்டு கடைவாயிலிலேயே நின்றுவிட்டதோ! காரணம் எதுவாயினும், களிறு-பிடி யிவற்றின் காதலுறவு கருதத்தக்கதாம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/75&oldid=550809" இலிருந்து மீள்விக்கப்பட்டது