பக்கம்:இன்ப வாழ்வு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

75


கலித்தொகை என்னும் காதல் இலக்கியத்திலும் யானைகளின் இன்ப மனைவாழ்க்கையைப் பலவிடங்களில் பரவலாகக் காணலாம். பிடியானது வேழத்தின் அருகிலேயே இருக்குமாம். கடுமையாக இடி இடித்து மழை பெய்யும் நள்ளிரவில் மின்னல் வெளிச்சத்தில் பெண் யானை மேய் வதற்கு ஆண் (வேழம்) துணை செய்யுமாம். பிடி நிறை சூல் உற்றுத் தானாகத் தீனி தேட முடியாமல் வருந்தும் காலத்தில், கரும்பு முதலியவற்றை முறித்து வந்து வேழம் ஊட்டுமாம். இன்னபிற சுவையான நிகழ்ச்சிகளை,

‘வறனுறல் அறியாத வழையமை நறுஞ்சாரல்

விறன்மலை வியலறை வீழ்பிடி உழையதா மறமிகு வேழங்தன் மாறுகொள் மைந்தினால் புகர்நுதல் புன்செய்த புய்கோடு போல’ (53) ‘இடியுமிழ் பிரங்கிய இரவுபெயல் கடுநாள்

கொடிவிடு பிருளிய மின்னுச்செய் விளக்கத்துப் பிடியொடு மேயும் செய்யுன் யானை அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன்’ (41) ‘ஒடுங்கா எழில்வேழம் வீழ்பிடிக் குற்ற

கடுஞ்சூல் வயாவிற் கமர்ந்து நெடுஞ்சினைத் தீங்கட் கரும்பின் கழைவாங்கும்” (40) முதலான கலித்தொகைப் பாடல்களால் தெரிந்து கொள்ள லாம். பிடிக்கும் வேழத்திற்கும் இடையேயுள்ள பெருங்காதல் என்னே!

மக்களுள் ஆண் பெண் உறவிலும், குடும்ப வாழ்விலும் முறையற்று நடப்பவரைப் பார்த்து, விலங்குகள் போல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/76&oldid=550810" இலிருந்து மீள்விக்கப்பட்டது