பக்கம்:இன்ப வாழ்வு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

இன்ப வாழ்வு


அமிழ்தத்தொடு நீயும் பிறந்தாய் என்றால் நீ மட்டும் ஏன் அந்தத் தண்மையை மறந்தாய்? பெண்ணோடு பிறந்தவர் களுக்குப் பெண்டிர்மேல் இரக்கம் இருக்கும் என்று சொல் வார்களே! திருமகளோடு பிறந்த நீ மட்டும் ஒரு பெண்ணாகிய என் மேல் ஏன் இரக்கம் கொள்ளாமல் வெப்பத்தை வீசுகின்றாய்? அப்படி என்றால் அவை யெல்லாம் புராணங்கள் புளுகிய பொய்தானோ?” என்று புலம்புகின்றாள் வல்லி. இதனைப் பாடல் வடிவில் பார்ப்போம். “தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே-அந்தத்

தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே-என்றன் பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே’.

மேலும் அவள் மொழிகின்றாள்: ‘ஓகோ மதியமே! இப்போது புரிந்துகொண்டேன் நீ என்னை எரிப்பதற்கு என்ன காரணம் என்பதை இதோ பார்! இது என்னுடைய கூந்தல். கறுத்துச் சுருண்டு வளைந்து நெளிந்து காணப்படுகின்றது. இதோ என்னுடைய பின்னல் சடை நீ இந்தச் சடையைப் பார்த்ததும் கிரகண காலத்தில் உன்னைப் பிடிக்கின்ற நாகப்பாம்பின் நடு உடல் என்றும், தலையைப் பார்த்ததும் பாம்பு படமெடுத்து நிற்கின்றது என்றும் எண்ணிக்கொண்டாய் போலும். உன் எதிரியாகிய பாம்பை நான் வைத்துக்கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை எரிக்கின்றாயா? அல்லது, வசந்த வல்லியின் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கின்றது; ஆதலின் அந்தப் பாம்பை இப்போதே சுட்டெரித்து விடவேண்டும் என்றெண்ணி அந்தப் பாம்பைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/81&oldid=550812" இலிருந்து மீள்விக்கப்பட்டது