பக்கம்:இன்ப வாழ்வு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

81


சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பன்று; பின்னல் சடை இனிமேலாயினும் எரிப்பதை நிறுத்து இந்த மோகினி தன்னுடைய மோகன் வரவில்லையே என்று வருந்துகின்றாள். உனக்கு ஏன் இந்த வேகம் வெண்ணிலாவே!’

‘மோகன் வரக் காணேன் என்றால் வெண்ணிலாவே-இந்த

வேகம் உனக் கானதென்ன வெண்ணிலாவே

நாகம் என்றே எண்ணவேண்டாம் வெண்ணிலாவே-இது

வாகு குழல் பின்னல் கண்டாய் வெண்ணிலாவே.”

“அது இருக்கட்டும். பேடியைப்போல ஒரு பெண்ணின் மேல் வந்து காய்கின்றாயே! இதுதானா சூரத்தனம்? வெட் கத்துடன் வீரமும் இருக்குமானால் அந்தச் சிவன் முன்பு சென்று காயக்கூடாதா?’ என்று வருந்திப் பேசினாள் வசந்தவல்லி.

பின்னர் அவள் மன்மதனை விளித்து, ‘ஏ மன்மதா! அந்தப் பாவி நிலா காய்கிறது போதாதென்று இந்தத் தென்றல் காற்று என்னும் புலியும் பாய்கிறது. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு முன்று’ என்ற முறையில் பற்றாக்குறைக்கு நீயும் ஏன் என்னைக் கொல்லாது கொல்கிறாய்? உன் கைவரிசையை அந்தக் குற்றால நாதரிடம் போய்க் காண்பி பார்க்கலாம்! ஏன், அவர் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து விடுவார் என்று அஞ்சு கின்றாயா? ஒரு பெண்ணிடம் போர்தொடுக்கும் நீயும் ஓர் ஆண் மகனா? பேடியே போதாய்!” என்று ஏசிப் பேசினாள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/82&oldid=550813" இலிருந்து மீள்விக்கப்பட்டது