பக்கம்:இன்ப வாழ்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

89


உள்ளன. ஆந்தையின் அலறலும் நன்று. தும்மலுடன் காகமும் இடம் சொல்லுது. முச்சும் நல்ல பக்கமே செல்லுது. பல்லியும் பல பலென்னப் பகருது. ஆகையாலே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே. அவன் கழுத்திலே கறுப்பு இருக்கும் அம்மே. சரி உன் கையைக் காட்டு.

(வசந்தவல்லி கையைக் காட்டுகிறாள்)

ஒகோ நல்ல கை யம்மே! என்னைப்போன்ற நாலு பேருக்கு அள்ளிக்கொடுக்கும் கை அம்மே! சரி, உதடும் நாக்கும் துடிக்கின்றன. குறி சொல்லுகிறேன் கேள்.

வல்லி: சொல்லு சொல்லு!

குற: ஒருநாள் தலைவன் தெருவில் வந்தான், பந்தாடிக் கொண்டிருந்த நீ அவனைப் பார்த்து அஞ்சிய தாகத் தெரிகின்றது. சரிதானே அம்மே!

வல்லி: என்னடி நீ குறிசொல்லுவது? எல்லா வற்றையும் என் வாயிலிருந்தே வரவழைக்கப் பார்க்கின்றாய். அச்சத்தினால் இந்தக் காய்ச்சலும் கிறுகிறுப்பும் வருமா?

குற:- இல்லம்மே! உள்ளதைச் சொன்னால் சீற்றம் வருமென்று ஒளித்தேன். உங்கள் காய்ச்சல் காமக்காய்ச்சல் அம்மே! கிறுகிறுப்பு மோகக் கிறுகிறுப்பு அம்மே! இப்போது சரிதானா?

வல்லி:- என்னடி! நான் பிறந்த வடிவமாய்இருக்கிறேன். இந்தக் கன்னியின்மேல் என்னென்னவோ பழி போடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/90&oldid=550821" இலிருந்து மீள்விக்கப்பட்டது