பக்கம்:இன்ப வாழ்வு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

91


அப்போது அவனுடைய தோழனாகிய நூவன் வந்தான். குறத்தியைத் தேடி அழைத்துக்கொண்டு வரும்படியாக நூவனைக் கேட்டுக்கொண்டான். அதற்கு என்ன கைம்மாறு செய்வாய்” என்றான் நூவன். “கைம்மாறா? எனக்குச் சில மந்திரங்கள் தெரியும். அதாவது, கூடி யிருப்பவரைப் பிரிக்கும் மந்திரம், பிரிந்திருப்பரைக் கூட்டும் மத்திரம், கண்கட்டி வித்தை முதலியனவும் கற்றுத் தருவேன்” என்றான் குறவன். அதற்கு நூவன், ‘பலே கெட்டிக்காரனப்பா நீ உன்னை ஆற்றிலிருந்து அப்பால் கடத்திவிட்டு விட்டால், பின்பு விண்வெளியில் பறப்பேன் என்பாய் போலிருக்கிறது. உனக்குத்தான் பிரிந்தவரைக் கூட்டும் மந்திரம் தெரியுமே-பிறகு ஏன் குறத்தியைத் தேடும்படி என்னைக் கெஞ்சுகிறாய்? நீயும் கெட்டாய். உன் மந்திரமும் கெட்டது. மந்திரக்காரர்கள் எல்லோருமே இப்படித்தான்போல் இருக்கிறது” என்று எள்ளி நகை யாடினான.

பின்பு குறச்சிங்கன் ஒன்றும் பதில்பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துத் தான் தனித்துத் தேடலானான். தற்செயலாகக் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் குற்றாலத்தில் ஒன்று கூடினார்கள். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சிங்கன், சிங்கி என்று பெயரிட்டுக்கொண்டு ஒருவர்க்கொருவர் உரையாடலாயினர்.

குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்: “இத்தனை காளாக என்னுடன் சொல்லாமல்

எங்கே கடந்தாய் நீ சிங்கி எங்கே நடந்தாய் சிங்கி’’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/92&oldid=550823" இலிருந்து மீள்விக்கப்பட்டது